இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பயிற்சி மையங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பயிற்சியின்போது மத்திய அரசு வழிக்காட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனக் கூறியது.
வீரர்களின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், விளையாட்டு சங்கங்கள் வீரர்களின் பயிற்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டது. கிரிக்கெட் வீரர்கள் யாரும் பயிற்சி மேற்கொள்ளவில்லை. அதேபோல் பிசிசிஐயால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் வாரியத்திடம் அனுமதி வாங்கிய பின்னரே பயிற்சியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்திருந்தது.