இந்திய ஆடவர் கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுவில் எம்எஸ்கே பிரசாத், ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தேர்வுக் குழுவினருக்கான நேர்காணல் இன்று நடந்தது.
இதற்கான நேர்காணலை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் நடத்தினர். அதில் மொத்தம் வந்த 40 விண்ணப்பங்களில் சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங், வெங்கடேஷ் பிரசாத், ராஜேஷ் செளகான், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இறுதி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.