தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

INDvBAN: பிங்க் நிற பந்துக்கு மும்முரம் காட்டும் பிசிசிஐ! - 72 பிங்க் பந்துகளை தயாரிபதற்கான ஓப்பந்த

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகல் - இரவு ஆட்டங்களாக நடைபெறவுள்ளதால் பிங்க் நிற பந்துகளை தயாரிக்கும் பணியில் பிசிசிஐ மும்முரம் காட்டிவருகிறது.

INDvBAN

By

Published : Oct 31, 2019, 3:31 PM IST

Updated : Oct 31, 2019, 4:02 PM IST

INDvBAN: இந்தியா - வங்கதேச அணிகள் அடுத்த மாதம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. இதில் நவம்பர் 22ஆம் தேதி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகல் - இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இந்தியா, வங்கதேச அணிகள் தற்போது தான் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பகல் - இரவு டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதகாலம் கூட இல்லாத நிலை பிரபல விளையாட்டு பொருள் விற்பனை நிறுவனமான எஸ்.ஜி நிறுவனத்திடம் 72 பிங்க் பந்துகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தபடும் பிங்க் நிற பந்துகள்

எஸ்.ஜி நிறுவனமானது இந்தியாவில் நடைபெறும் உள்ளுர் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான சிகப்பு பந்துகளை தயாரித்து வந்தது. அதனால் இந்த பிங்க் பந்திற்கான ஒப்பந்தத்தையும் பிசிசிஐ வழங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் நட்சத்திர டெஸ்ட் வீரர்களான முகமது ஷமி, உமேஷ் யாதேவ், இஷாந்த் ஷர்மா, புஜாரா ஆகியோரை வைத்து பிங்க் பந்திற்கான சோதனைகளை அடுத்தவாரம் பிசிசிஐ நடத்தவுள்ளது.

இதையும் படிங்க: ஷகிப்பிற்கு இரக்கம் காட்டக்கூடாது இன்னும் அதிகமா தண்டனை குடுத்திருக்கணும் - இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

Last Updated : Oct 31, 2019, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details