ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்ஸராக கடந்த சில ஆண்டுகளாக சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ இருந்துவந்தது. ஆனால், கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சீன பொருட்கள் மீதான எதிர்ப்பு இந்தியாவில்அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகவுள்ளதாக விவோ அறிவித்தது.
மேலும், ஜியோ, அமேசான், டாடா குழுமம், அதானி குழுமம், பைஜூஸ், ட்ரீம் 11 உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸருக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில், இந்த பல்முனைப் போட்டியில் யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனமும் தற்போது புதிதாகஇணைந்துள்ளது.