தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வரி விலக்கு தொடர்பாக பிசிசிஐ - ஐசிசி ஆலோசனை! - வரி விலக்கு பிசிசிஐ

இந்தியாவில் அடுத்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், வரி விலக்கு பெறுவது தொடர்பாக ஐசிசி, பிசிசிஐ இடையே ஆலோசனை நடந்துவருகிறது.

BCCI, ICC collectively working on resolving tax issue to deliver world-class event
BCCI, ICC collectively working on resolving tax issue to deliver world-class event

By

Published : May 27, 2020, 4:13 PM IST

பொதுவாக டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை உள்ளிட்ட ஐசிசி தொடர்களை நடத்தும் நாடுகளுக்கு வரி விலக்கு பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், 2016இல் இந்தியாவில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிசிசிஐ வரி விலக்கு வழங்காததால் ஐசிசிக்கு 20 முதல் 30 மில்லியன் டாலர் இழப்பு நேரிட்டது.

இதனால், பிசிசிஐ ரூ. 160 கோடி ஐசிசிக்கு வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இந்தியாவில் 2021இல் டி20 உலகக்கோப்பை தொடரும், 2023இல் உலகக்கோப்பை ஒருநாள் தொடர்களை நடத்த முடியாது எனவும் ஐசிசியை எச்சரிக்கை விடுத்தது.‘

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, மே18க்குள் மத்திய அரசுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தி தீர்வு காண வேண்டும் என பிசிசிஐக்கு ஐசிசி அறிவுறுத்தியது. இதற்கு பிசிசிஐ கரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி கேட்டுக்கொண்டது. ஆனால், பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க ஐசிசி மறுத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக வரி விலக்கு பெறுவது தொடர்பாக ஐசிசி, பிசிசிஐ இடையே ஆலோசனை நடந்துவருகிறது. ஒருவேளை இந்தத் தொடருக்கு பிசிசிஐ வரி விலக்கு அளிக்கவில்லை என்றால் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.

முன்னதாக இந்தியாவில் 2021இல் டி20 உலகக்கோப்பை, 2023இல் உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்கும் வரி விலக்கு வழங்கவில்லை என்றால் ஐசிசிக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஒருநாள் போட்டிகளில் பவுன்சர் பந்துகளுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - அக்தர்!

ABOUT THE AUTHOR

...view details