பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் சகோதரர் ஸ்னேகாஷிஷ் கங்குலி. பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளரான இவர், நேற்று (ஜூலை 15) கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக கொல்கத்தாவின் பெல்லி வூ கிளினிக் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில நாள்களாக பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் தங்கியிருந்ததால், மாநில அரசின் விதிமுறைகளின் படி கங்குலி தனது வீட்டிலேயே சுய தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னதாக ஸ்னேகாஷிஷ் கங்குலியின் மனைவி, மாமியார் ஆகியோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது ஸ்னேகாஷிஷ் கங்குலிக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு கரோனா இல்லை என்று முடிவு வந்தது. ஆனால் தற்போது கரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று முடிவு வந்திருப்பது அவரது குடும்பத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 838ஆக உள்ளது.
இதையும் படிங்க:கங்குலியால் பலன் அடைந்தவர் தோனி - சங்ககரா!