தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'தடைன்னா என்ன? எங்களுக்கு இலங்கை இருக்காங்கப்பா'- அட்டவணையை மாற்றிய பிசிசிஐ! - three t20 against india

டெல்லி: இந்தியா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவிருந்த ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

Bcci

By

Published : Sep 26, 2019, 2:45 PM IST

வருகிற 2020ஆம் ஆண்டு இந்தியாவுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே அணி மோதவிருந்தது. ஆனால் சமீபத்தில் ஜிம்பாப்வே அணியில் அரசியல் தலையீடுகள் இருப்பது காரணமாக அந்த அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) தடைவிதித்தது.

இதனால் இந்திய அணியுடனான தொடரில் ஜிம்பாப்வே அணி விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்குப் பதிலாக வேறு அணியை வைத்து தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இலங்கை அணி சம்மதம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவிற்கு பதிலாக இலங்கை அணி பங்கேற்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் போட்டிக்கான அட்டவணை:

  • முதல் டி20 ஜனவரி 5ஆம் தேதி கௌகாத்தில் தொடங்குகிறது.
  • இரண்டாவது டி20 ஜனவரி 7ஆம் தேதி இந்தூரில் தொடங்குகிறது.
  • மூன்றாவது டி20 ஜனவரி 10ஆம் தேதி புனேவில் தொடங்குகிறது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஐந்து ரன்கள் தேவை... ஐந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப தோல்வி அடைந்த டாஸ்மானியா! ஆஸி.யில் மிராக்கல்

ABOUT THE AUTHOR

...view details