தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிறப்பு சான்றிதழில் மோசடிசெய்த இளம் கிரிக்கெட் வீரருக்கு பிசிசிஐ  தடை! - Under 19 Cricketer

மும்பை: டெல்லியைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர், பிறப்பு சான்றிதழில் மோசடிசெய்ததற்காக , அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

BCCI bans u19 cricketer prince yadav for age fraud
BCCI bans u19 cricketer prince yadav for age fraud

By

Published : Dec 2, 2019, 3:05 PM IST

டெல்லியைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ப்ரின்ஸ் ராம் நிவாஸ் யாதவ். இவர் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாட 2018-19ஆம் ஆண்டுகளில் பதிவு செய்திருந்தார். அதேபோல் 2019-20ஆம் ஆண்டிலும் பதிவு செய்துள்ளார். இதற்காக அவர் சமர்பித்துள்ள பிறப்பு சான்றிதழில் அவரின் பிறந்த தேதி டிச. 12, 2001 என கூறப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த டெல்லி கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ-யிடம் இளம் வீரர் ராம் நிவாஸ்-ன் பிறப்பு சான்றிதழ் குறித்து உறுதிசெய்யுமாறு கடிதம் அனுப்பியது. இதையடுத்து ராம் நிவாஸ் குறித்த தகவல்களை பரிசோதனை செய்கையில், ராம் நிவாஸ் தனது 10ஆம் வகுப்பை 2012ஆம் ஆண்டு நிறைவு செய்தததாகவும், உண்மையான பிறந்த தேதி ஜூன் 10, 1996 எனவும் தெரியவந்தது.

இதையடுத்து பிறப்பு சான்றிதழை ஏமாற்றியதற்காக இளம் வீரர் ராம் நிவாஸ்-க்கு இரண்டு ஆண்டுகள் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலம் முடிந்ததும், சீனியர் கிரிக்கெட் அணியில் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கண்ணான கண்ணே....! மகள் ஸிவா உடன் தோனி ரிலாக்ஸ்

ABOUT THE AUTHOR

...view details