தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

’அடுத்த ஐந்தாண்டும் நாங்கதான்!’ - இந்திய கிரிக்கெட் அணி

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை பேடிஎம் மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.

paytm sponsor

By

Published : Aug 22, 2019, 10:29 AM IST

இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச, உள்ளூர் போட்டிகளுக்கான ’டைட்டில் ஸ்பான்சர்ஷிப்’ உரிமையை கடந்த 2015ஆம் ஆண்டு ரூ.203.28 கோடிக்கு பேடிஎம் நிறுவனம் வாங்கியது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் நடப்பாண்டுடன் முடிவடைந்ததையடுத்து, மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு (2019-2023) இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை பிசிசிஐ வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தத் தொகையாக 326.80 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் பேடிஎம் நிறுவனம் வாங்கியுள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டியிலிருந்து பேடிஎம் நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் கணக்கிடப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details