தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மீண்டும் இந்திய அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்ட சஞ்சு சாம்சன் - வேகப்பந்துவீச்சாளர்கள் நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் மீண்டும் இந்திய அணியில்

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

Samson dropped
Samson dropped

By

Published : Jan 13, 2020, 8:26 AM IST

நியூசிலாந்தில் இம்மாத இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 24ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இதில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் ஓய்வுபெற்றிருந்த இந்திய அணியின் தொடக்கவீரர் ரோஹித் சர்மா மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார். மேலும் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி மீண்டும் டி20 போட்டிகளில் களமிறங்குகிறார்.

அதேபோல் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.

ஆனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இத்தொடருக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பின் இந்திய டி20 அணியில் இடம்பிடித்த அவரது வாய்ப்பு மீண்டும் பறிபோகியுள்ளது.

டி20 போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் தூபே, குல்தீப் யாதவ், சஹால், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர்.

இதையும் படிங்க:தோனியைப் போல் ஆட்டங்களை முடிக்க கற்றுக் கொள்ளவேண்டும்: ஆஸ்திரேலிய துணை கேப்டன்!

ABOUT THE AUTHOR

...view details