இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாபு நட்கர்னி வயது மூப்பின் (86) காரணமாக நேற்று மும்பையில் காலமானார். காலமான நட்கர்னிக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்திய அணிக்காக விளையாடியுள்ள இவர் 41 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 88 விக்கெட்டுகளையும், 1,414 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும் 1964ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்களை வீசி உலக சாதனை படைத்தார்.