மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஆறாவது லீக் போட்டி பெர்த்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் அணியில் சேர்க்க்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடனான முதல் போட்டியில் 132 ரன்கள் அடித்திருந்தாலும், பூனம் யாதவ், ஷீகா பாண்டே ஆகியோரது சிறப்பான பந்துவீச்சினால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இவ்விரு அணிகள் இதுவரை ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்திய அணி மூன்று முறையும், வங்கதேச அணி இரண்டு முறையும் வென்றுள்ளது.