தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வரலாற்றுச் சிறப்பு மிக்க டெஸ்ட் தொடரில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்! - வரலாற்று சிறப்பு மிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி

கொல்கத்தா: இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

india vs bangladesh

By

Published : Nov 22, 2019, 12:59 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக, கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்துள்ளது.

ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி மாற்றங்கள் ஏதுமின்றி அதே உத்வேகத்தில் களம் காண்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த வங்கதேச அணியில் டைஜுல், மெஹிதி ஹசன் ஆகியோருக்கு பதிலாக அல் அமீன், நயீம் ஹசன் ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றனர்.

இந்திய அணி: மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா

வங்கதேச அணி: ஷாத்மான் இஸ்லாம், இம்ருல் கெய்ஸ், மோமினுல் ஹக் (கே), முகமது மிதுன், முஷ்பிகுர் ரஹீம், முஹ்முதுல்லா, லிட்டன் தாஸ் , நயீம் ஹசன், அபு ஜெயத், அல்-அமீன் ஹொசைன், எபாதத் ஹொசைன்

இதையும் படிங்க: NZ vs ENG 2019: நியூசிலாந்தின் அஸ்திவாரத்தை உலுக்கிய கர்ரன் புயல்!

ABOUT THE AUTHOR

...view details