உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பல்வேறு பிரபலங்களும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் கேப்டன் மோமினுல் ஹாக், ஆல் ரவுண்டர் மஹமுதுல்லா ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தேர்வுக்குழுத் தலைவரான ஹபிபுல் பஷர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதைப்பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் மிகவும் பாதுகாப்பாகவே இருந்தேன். இருந்தும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்கு நம்மால் எதுவும் செய்ய முடியாது. கடந்த திங்கள்கிழமை கொஞ்சம் காய்ச்சலை உணர்ந்தேன்.