கரோனா வைரஸ் சூழலில் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் வீரர்கள் ரசிகர்களை உயிர்ப்புடன் வைக்க இன்ஸ்டாகிராமில் உரையாடல் நடத்தி வருகின்றனர். அதில் நேற்று வங்கதேசத்தின் தமீம் இக்பாலுடன் பாகிஸ்தான் ஜாம்பவான் அக்ரம் பங்கேற்றார்.
அந்த உரையாடலின்போது வாசிம் அக்ரம் பேசுகையில், '' நான் வங்கதேசத்தை மிஸ் செய்கிறேன். வங்கதேசத்திற்கு எப்போதும் எனது மனதில் நெருக்கமான இடம் உண்டு. அங்கு வாழும் மக்கள், அங்கு கிடைக்கும் உணவுகள், நிச்சயம் கிரிக்கெட் என அனைத்தும் ரொம்ப பிடிக்கும்.