ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் லீக்கின் 17ஆவது லீக் ஆட்டத்தில் திசாரா பெரேரா தலைமையிலான பங்களா டைகர்ஸ் அணி, டேரன் சமி தலைமையிலான நார்த்தன் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் வென்ற டாஸ் வாரியர்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பங்களா டைகர்ஸ் அணிக்கு அண்ட்ரே ஃபிலெட்சர், ரோஸ்ஸோ இணை அதிரடியான தொடக்கத்தை தந்தனர். அதன் பின் இறுதியில் ராபி ஃபரைலின்க் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி, 12 பந்துகளில் 36 ரன்களைக் குவித்தார்.
இதன் மூலம் பங்களா டைகர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை எடுத்தது. வாரியர்ஸ் அணி தரப்பில் ரயத் எம்ரிட் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய வாரியர்ஸ் அணியில், ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 45 ரன்களை சேர்த்துவிட்டு ஆட்டமிழந்தார்.