இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி சார்பில் இளம் வீரரான ஷிவம் தூபே தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.