வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி விளையாடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 430 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 259 ரன்னும் எடுத்தன. பின்னர் 171 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மொமினுல் ஹக் 115 ரன்களும், லிட்டன் தாஸ் 69 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 370 ரன்களை வங்கதேச அணி நிர்ணயித்தது.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிராத்வெயிட், காம்பெல், மோஸ்லே ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் கெய்ல் மேயர்ஸ் - நிக்ருமா போனர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தத் தொடங்கியது.