தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாபரின் பணிவு அவரை உயர்த்தும்: சக்லைன் முஷ்டாக் - பாகிஸ்தானின் பாபர் அஸாம்

லாகூர்: பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாமின் பணிவு அவரை நட்சத்திர வீரராக மாற்றும் என முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.

babars-calmness-gives-him-an-edge-over-virat-kohli-saqlain-mushtaq
babars-calmness-gives-him-an-edge-over-virat-kohli-saqlain-mushtaq

By

Published : Jun 15, 2020, 11:31 PM IST

சமீப காலங்களில் இந்தியாவின் கேப்டன் விராட் கோலிக்கு சமமான வீரர் பாகிஸ்தானின் பாபர் அஸாம் என பரவலாக கூறப்படுகிறது. இளம் வீரரான பாபர் அஸாம் தொடர்ந்து ரன்கள் சேர்ப்பதாலும், அணியை முன் நின்று வழிநடத்துவதாலும் விராட் கோலியைப் போல் மாபெரும் வீரராக வருவார் என கிரிக்கெட் ரசிகர்கள் கணித்துள்ளனர்.

இந்த ஒப்பீடு குறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக் பேசியுள்ளார். அதில், ''விராட் கோலி, பாபர் அஸாம் இருவரும் திறமையான வீரர்கள். டெக்னிக்கலாக சிறந்த வீரர்கள். விராட் கோலிக்கு ஆக்ரோஷம் கைகொடுக்கிறது என்றால், பாபர் அஸாமிற்கு பணிவு கைக்கொடுக்கிறது.

ஆனால் இருவரையும் ஒப்பீடு செய்வது சரியாக இருக்காது. ஏனென்றால் விராட் கோலியின் அனுபவம் எங்கேயோ இருக்கிறது. பாபர் இப்போதுதான் சர்வதேச தரத்திற்கு தன்னை உயர்த்திக் கொண்டு வருகிறார். அதனால் இப்போது பாபரை எவ்வித அழுத்தத்திலும் தள்ளக்கூடாது'' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details