தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இம்ரான் கான் ஆக பாபர் அசாமுக்கு அக்தர் யோசனை! - இம்ரான் கான் குறித்து பாபர் அசாம்

இம்ரான் கானை போல பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை வழிநடத்த வேண்டுமென்றால், அவர் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் என சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Babar Azam has to improve his communication skills to lead PAK like Imran: Akhtar
Babar Azam has to improve his communication skills to lead PAK like Imran: Akhtar

By

Published : May 22, 2020, 4:40 PM IST

பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்த முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஸ்டைலை நான் பின்தொடர்வேன் என பாபர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இம்ரான் கானை போல பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை வழிநடத்த வேண்டுமென்றால் அவர் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன என அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அக்தர் கூறுகையில், "இம்ரான் கானைப் போன்ற ஒரு கேப்டனாக இருக்க வேண்டும் என பாபர் அசாம் விரும்புகிறார். ஆனால் இது கிரிக்கெட் விளையாடுவதோடு மட்டும் தொடர்புடையது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. இம்ரான் கானை போல அவர் தனது ஆளுமை, பேச்சுத்திறன், உடற்தகுதி, அணியை முன்நின்று நடத்தும் திறன் உள்ளிட்டவைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:அந்த பந்தில் சச்சின் சிக்சர் அடிப்பார் என எதிர்பார்த்தேன்: அக்தரின் ஃபேன் பாய் மொமண்ட்...!

ABOUT THE AUTHOR

...view details