தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிய ஆஸி. வீரர்கள் - boxing day test

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தங்களின் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படத்தை ஐசிசி ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

david warner
david warner

By

Published : Dec 25, 2019, 9:34 PM IST

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இதனிடையே, ஆஸ்திரேலிய அணி நாளை மெல்போர்னில் தொடங்கவிருக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இதனிடையே இதற்கான பயிற்சியில் இன்று ஆஸ்திரேலிய வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களின் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

அதில் டேவிட் வார்னர் தனது மகளுக்கு பந்துவீசும் படம், கேப்டன் டிம் பெயின் குழந்தைகளுடன் விளையாடும் படம் ஆகியவற்றை ஐசிசியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

இதையும் படிங்க: சீக்கரம் மேட்ச் ஆடலாம் - ஸ்மித்!

ABOUT THE AUTHOR

...view details