தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாஸ் வென்ற ஆரோன் ஃபிஞ்ச் பேட்டிங் தேர்வு; இந்தியா பவுலிங்! - India Bowling

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

Australia won the toss and Chooses to Bat against India
Australia won the toss and Chooses to Bat against India

By

Published : Jan 19, 2020, 1:22 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் எவ்வித மாற்றங்களுமின்றி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடிய அதே அணியே ஆடுகிறது.

ஆஸ்திரேலிய அணியில் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு ஹேசல்வுட் இடம்பெற்றுள்ளார்.

இந்தத் தொடரில் நடந்துமுடிந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடம் 1-1 என சமநிலையில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்:விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப், பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி.

ஆஸ்திரேலிய அணி விவரம்: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசானே, அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஹெசல்வுட், ஆடம் ஸாம்பா.

இதையும் படிங்க: 22 பவுண்டரி, 2 சிக்சர்... மாஸ் காட்டும் ப்ரித்வி ஷா

ABOUT THE AUTHOR

...view details