தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#AUSWvsSLW: 'அடி...சரவெடி' - தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா! - அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா

சிட்னி: ஆஸ்திரேலிய மகளிர் - இலங்கை மகளிர் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

#AUSWvsSLW

By

Published : Sep 30, 2019, 10:03 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணி மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து 16 ரன்களில் வெளியேற அந்த அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை மட்டுமே எடுத்தது. அதனைத் தொடர்ந்து எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய பெத் மூனி ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.

இதையும் படிங்க:#AUSWvsSLW: என்னா அடி... எங்கமா இருந்திங்க இவ்வளவு நாளா?

ABOUT THE AUTHOR

...view details