தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அடுத்தடுத்து 22 வெற்றிகள்: பாண்டிங்கின் 17 ஆண்டு சாதனையை முறியடித்த மெக் லேனிங்

ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் படைத்த சாதனையை 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லேனிங் முறியடித்து 22 தொடர் வெற்றிகள் என புதிய வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.

Australia Women's cricket team creates record
ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி

By

Published : Apr 4, 2021, 1:01 PM IST

மவுண்ட் மௌங்கனுய்: மெக் லேனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ந்து 22 வெற்றிகள் பெற்று உலகச் சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தச் சாதனையை மெக் லேனிங் படைத்துள்ளார்.

முன்னதாக, 21 ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து வென்று ரிக்கி பாண்டிங் 2003ஆம் ஆண்டு சாதனைப் படைத்தார். இதையடுத்து நியூசிலாந்து அணியை இன்று (ஏப்ரல் 4) நடைபெற்ற போட்டியில் வீழ்த்தியதன்மூலம் தொடர்ந்து 22ஆவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளார் ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லேனிங்.

இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு 213 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 37 ரன்களுக்கு தொடக்க வீரங்கனைகளை இழந்தது தவித்தது. ரச்சலே ஹேனஸ் 14, லேனிங் 5 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் களமிறங்கிய அலேசா ஹீலே - எல்லிதே பெரி இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர். 68 ரன்கள் எடுத்திருந்தபோது ஹீலே தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக வந்த பெத் மூனே 12 ரன்களில் ஆட்டமிழக்க போட்டி மீண்டும் சூடுபிடித்தது.

இருப்பினும், பெரி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்த கார்டெனர் சிறப்பாக பார்னர்ஷிப் அமைக்க, இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர். கடைசிவரை ஆட்டமிழக்காமல் பெரி 56, கார்ட்னெர் 53 ரன்கள் எடுக்க வெற்றிக்கான இலக்கை அடைந்தது ஆஸ்திரேலிய அணி. இதன்மூலம் வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 49 ரன்களுக்கு 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்வுமன் லாரன் 90 ரன்கள் குவித்தார். அவரைத் தவிர மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் பேட்டிங்கில் பங்களிப்பு அளிக்கவில்லை. ஆஸ்திரேலிய தரப்பில் மெகன் ஸ்கட் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிங்க: முரட்டு அடி சேவாக்கிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம் - கேப்டன்சி குறித்து கங்குலி

ABOUT THE AUTHOR

...view details