தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

18 போட்டிகளில் அடிமேல் அடித்த ஆஸ்திரேலியா - புதிய உலக சாதனை! - ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ச்சியாக 18 ஒரு நாள் வெற்றி

சர்வதேச ஒருநாள் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 18 வெற்றிகளைப் பெற்று ஆஸ்திரேலிய மகளிர் அணி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.

most consecutive ODI wins

By

Published : Oct 10, 2019, 10:57 PM IST

ஆஸ்திரேலிய மகளிர் அணி நேற்று இலங்கை மகளிர் அணியுடனான கடைசி ஒருநாள் போட்டியில் பங்கெடுத்தது. நேற்று பிரிஸ்பெனில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக சாமாரி அத்தபத்து 103 ரன்களை விளாசினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அலிஸா ஹீலியின் அதிரடி ஆட்டத்தினால் 26.5 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியில் அதிகபட்சமாக அலிஸா 112 ரன்களை விளாசி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ச்சியாக 18 ஒரு நாள் வெற்றிகளைப் பெற்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றிப் பயணமானது, 2018ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணியுடன் தொடங்கியது.

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்த சாதனையில் 12 போட்டிகளை நான்கு கண்டங்களில் விளையாடி வெற்றியைப் பதிவுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெஸ்ட், ஒருநாள், டி20 - 14ஆவது ஆளாக கெவின் ஓ பிரைன் நிகழ்த்திய சாதனை!

ABOUT THE AUTHOR

...view details