ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் (பாக்ஸிங் டே) போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஏற்கெனவே இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்ததால், இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் நான்கு மிகப்பெரும் மாற்றங்களுடன் இந்திய அணி களம்கண்டுவருகிறது. இதில் சுப்மன் கில், சிராஜ் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளனர். மேலும் நட்சத்திர வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த் ஆகியோருக்கும் இப்போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் சறுக்கல்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் 100ஆவது டெஸ்ட் போட்டியாகவும் இது அமைந்துள்ளது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிவுள்ள ஆஸ்திரேலிய அணியில் ஜோ பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பும்ராவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.