ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முன்னதாக, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் காயம், உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நியூசிலாந்து அணியில் ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டன. அணியின் கேப்டன் வில்லியம்சன், மிட்சல் சாண்ட்னர், ஹென்றி நிக்கோலஸ், டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் ஆகியோருக்குப் பதிலாக ஜீத் ரவால், கிளென் ஃபிலிப்ஸ், மேட் ஹென்றி, டோட் ஆஸ்டில், வில்லியம் சோமர்வில் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து, இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 454 ரன்களும், நியூசிலாந்து அணி 251 ரன்களும் அடித்தன. இதனால், 198 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய மூன்றாம் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை எடுத்திருந்தது.
தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 23 ரன்களிலும், ஜோ பர்ன்ஸ் 16 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று தொடங்கிய நான்காம் ஆட்டநாளில் ஜோ பர்ன்ஸ் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டியில் தனது 24ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.