தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பகலிரவு டெஸ்ட்: பந்துவீச்சில் அசத்திய ஆஸ்திரேலியா, சமாளிக்க முடியாமல் இந்தியா தடுமாற்றம் - அஜிங்கியா ரஹானே

அடிலெய்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 233 ரன்களை எடுத்துள்ளது.

Australia vs India, 1st Test: India 233/6 at Stumps on Day 1
Australia vs India, 1st Test: India 233/6 at Stumps on Day 1

By

Published : Dec 17, 2020, 5:46 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்று (டிசம்பர் 17) தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

தொடக்கமே தடுமாற்றம்:

அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா ரன் ஏதுமின்றியும், மயாங்க் அகர்வால் 14 ரன்களிலும் அடுத்தடுத்து போல்டாகி ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் அசத்திய ஸ்டார்க்

பின்னர், ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - புஜாரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதனால் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை எடுத்திருந்தது.

புஜாரா

இதையடுத்து, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாரா 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நாதன் லயன் பந்துவீச்சில் லபுசாக்னேவிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

நிதான ஆட்டத்தில் ரஹானே - கோலி:

கோலியுடன் ஜோடி சேர்ந்து அஜிங்கியா ரஹானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தினார். மேலும் பார்ட்னர்ஷிப் முறையில் இந்த ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

அரைசதம் கடந்த விராட் கோலி

அதன்பின், 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி ரன் அவுட்டாகி வெளியேற, அவரை தொடர்ந்து 42 ரன்களில் ரஹானேவும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

நடுகள வீரர்கள் ஏமாற்றம்:

அவர்களை தொடர்ந்து, களமிறங்கிய ஹனுமா விஹாரி 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர், ஜோடி சேர்ந்த சஹா - அஸ்வின் இணை எதிரணியின் பந்துவீச்சை சமாளித்தது.

அஜிங்கியா ரஹானே

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சஹா 9 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளையும், ஹசில்வுட், கம்மின்ஸ், லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையும் படிங்க:சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் முகமது அமீர்!

ABOUT THE AUTHOR

...view details