கோவிட்-19 பெருந்தொற்றினால் இதுவரை உலகெங்கிலும் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும், இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை மீட்பதற்காக அணியின் வீரர்கள் தங்களது சம்பளத்தை விட்டுக்கொடுக்கவும் தயாராக உள்ளனர் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பெருந்தொற்றால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் கால்பந்து வீரர்கள் தங்களது ஊதியத்தை குறைக்கும் முடிவுக்கு வந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தற்போதுதான் அவர்களின் நிலை எனக்கு புரிந்துள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிலும் அதே நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.