உலக கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடத்தப்படும் ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டின் பெய்ன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக ட்ராவிஸ் ஹெட், ஸ்டார்க் நீக்கப்பட்டு ஆல்-ரவுண்டர் மிட்சல் மார்ஷ், சிடில் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியில் ஓவர்டன், ஜேசன் ராய் ஆகியோர் நீக்கப்பட்டு இளம் வீரர்களான சாம் கரண், கிறிஸ் வோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளனர்.
ஆனால், வலிமையான ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை இங்கிலாந்து அணியினர் எவ்வாறு சமாளித்து தொடரை சமன் செய்ய போகிறார்கள் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளதால், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.
மேலும் ஆஷஸ் தொடரை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணி டிஃபெண்டிங் சாம்பியன் என்பதால் இந்தத் தொடரை இங்கிலாந்து அணி சமன் செய்தாலும், ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி விவரம்: ஜோ ரூட் (கேப்டன்), ரோரி பர்ன்ஸ், ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ், ஜானி பெயர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், ஆர்ச்சர், லீச், பிராட்.
ஆஸ்திரேலிய அணி விவரம்:டிம் பெய்ன் (கேப்டன்), மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர், லபுஸ்சக்னே, ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் மார்ஷ், மேத்யூ வேட், பட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், நாதன் லயன், ஹெசல்வுட்.