ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது இரண்டுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் தொடங்கியது.
இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் இன்னிங்ஸில் 244 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக அசாத் ஷபிக் 76 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்சல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில் இன்று போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ் களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 31ஆவது அரை சதத்தை அடித்து அசத்தினார்.
அரை சதமடித்த மகிழ்ச்சியில் டேவிட் வார்னர் இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை, விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் கடந்துள்ளது. அந்த அணியில் டேவிட் வார்னர் 52 ரன்களுடனும், ஜோ பர்ன்ஸ் 41 ரன்களுடனும் களத்திலுள்ளனர்.
இதையும் படிங்க: டேவிஸ் கோப்பை டென்னிஸ் - வெற்றிபெற்றும் வெளியேறிய அமெரிக்கா