கரோனா தொற்று பாதிப்பால் நீண்ட நாள்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. ஏற்கனவே இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து - அயர்லாந்து, இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெற்ற நிலையில், அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தற்போது உறுதியாகி உள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது மூன்று டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கவுள்ளது. இதற்காக 21 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.