ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பாபர் ஆசம்(6), ரிஷ்வான்(0), இமான் உக் ஹக்(14), சோஹைல்(8) என அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
பின் களமிறங்கிய அஹ்மது சிறப்பாக விளையாடி 45 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு, 106 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ரிட்சர்ட்சன் மூன்று விக்கெட்டுகளையும், ஸ்டார்க், அப்போட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் ஆகியோர் அதிரடியில் எதிரணியைத் திணறடித்தனர். இதன் மூலம் முதல் ஆறு ஓவர்களுக்குள்ளாகவே ஆஸ்திரேலிய அணி 56 ரன்களை விளாசியது.