இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் இந்திய அணியை பேட்டிங் செய்யப் பணித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 255 ரன்கள் எடுத்தது. இதில் தவான் 74 ரன்களும், ராகுல் 47 ரன்களும் அடித்தனர். இதையடுத்து 256 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான பிஞ்ச் - வார்னர் களமிறங்கினர்.
இந்த இணை தொடக்கம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கினர். இவர்களைப் பிரிக்க கேப்டன் விராட் கோலி அனைத்து பந்துவீச்சாளர்களையும் மாற்றி மாற்றி பந்துவீசச் சொல்லியும் பலன் கிடைக்கவில்லை. இந்த இணையின் அதிவேக ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் 120 ரன்களைக் கடந்தது. இதையடுத்து டாப் கியருக்கு மாறிய ஆஸ்திரேலியன் அணியின் பேட்டிங்கை இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறிதும் அச்சுறுத்தாமல் பந்துவீசினர்.