சூப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியா! - ஒருநாள் போட்டி
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றதன் மூலம், உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இப்பட்டியலில் இந்திய அணி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Australia attains top spot in Super League table, India at 6
By
Published : Dec 2, 2020, 9:38 PM IST
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இருப்பினும் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதன் மூலம் ஐசிசியின் உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து அணியும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன. இப்பட்டியலில் இந்திய அணி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் உலகக்கோப்பைத் தொடருக்கு இந்திய அணி நேரடியாக தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.