அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையின் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் மார்னுஸ் லபுசாக்னே, ஒருநாள் அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல் அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மிங்ஸ் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
மேலும் இந்த அணியை ஆரோன் பின்ச் வழிநடத்துகிறார். ஆஸ்திரேலிய அணியின் துணைக்கேப்டன்களாக பாட் கம்மின்ங்ஸ், அலெக்ஸ் கேரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பின்ச் , டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பீட்டர் ஹன்ஸ்கோம்ப், மார்னுஸ் லபுசாக்னே, அலெக்ஸ் கேரி, அஷ்டன் டர்னர், அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், ஹசில்வுட், ரிட்சர்ட்சன், மிட்சல் ஸ்டாகர், சீன் அப்போட், ஆடம் ஸாம்பா.
இதையும் படிங்க:ஹைதராபாத் அணியில் மிட்சல் ஸ்டார்க்? டேவிட் வார்னர் பதிவால் குழப்பமடைந்த ரசிகர்கள்!