மெல்போர்னில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணி 321 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை முடித்திருந்த நிலையில், 131 ரன்கள் பின்தங்கி ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து வருகிறது.
இப்போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தனது நான்காவது ஓவரை வீசும்போது காயமடைந்தார். உடனே களத்திற்கு வந்த மருத்துவர்கள் உமேஷ் யாதவை பரிசோதனை செய்தனர். பின்னர் அவரது காயம் குறித்த அடுத்தகட்ட பரிசோதனைக்காக உமேஷ் யாதவ், போட்டியின் பாதியிலேயே களத்திலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து உமேஷ் யாதவின் ஓவரை முகமது சிராஜ் நிறைவுசெய்தார். இருப்பினும் உமேஷ் யாதவின் காயம் குறித்த சரியான தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.