தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பகலிரவு டெஸ்ட்: பிளேயிங் லெவனை தேர்வு செய்த வார்னே! - தமிழ் விளையாட்டு செய்திகள்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டிகான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே தேர்வு செய்துள்ளார்.

AUS VS IND: Shane Warne picks Australia's playing XI for 1st Test
AUS VS IND: Shane Warne picks Australia's playing XI for 1st Test

By

Published : Dec 13, 2020, 6:41 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிச.17ஆம் தேதி முதல் தொடங்கிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அடிலெய்ட் டெஸ்டில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை, அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே இன்று தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ள வார்னருக்கு பதிலாக மேத்யூ வேட், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோரை தொடக்க வீரர்களாக களமிறக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதுள்ள தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் மோசமான ஃபார்மில் உள்ளதால, அவருக்கு எனது பிளேயிங் லெவனில் இடமில்லை. அதேசமயம் பயிற்சி ஆட்டத்தின்போது காயமடந்த கமரூன் கிரீனிற்கு பதிலாக ஷான் மார்ஷை தேர்வு செய்யலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

வார்னேவின் பிளேயிங் லெவன்:மேத்யூ வேட், மார்கஸ் ஹாரிஸ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசானே, டிராவிஸ் ஹெட், ஷான் மார்ஷ், டிம் பெய்ன் (கே), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹாசில்வுட்.

இதையும் படிங்க:ஆஸ்திரேலிய அணியில் இணையும் ஸ்டார்க்!

ABOUT THE AUTHOR

...view details