ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (டிச.04) நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய டி20 அணியின் இடம்பிடித்திருந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர், காயம் காரணமாக மீதமுள்ள டி20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு மாற்று வீரராக டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்த நாதன் லயன் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.