ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடிவருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனிப்பட்ட காரணங்களுக்காக மீதமுள்ள டி20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டீன் லங்கர் கூறுகையில், மிட்செல் ஸ்டார்க் தனது குடும்ப சூழ்நிலைக் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். இவ்வுலகில் குடும்பத்தைவிட முக்கியமானது எதுவுமில்லை. இந்த விஷயத்தில் ஸ்டார்க் ஒன்றும் விதிவிலக்கல்ல. ஸ்டார்க்கிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம். அவர் தனது பிரச்சினையிலிருந்து மீண்டதும் அணிக்குத் திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.