தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் விலகுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. மூன்றாவது போட்டி வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்காக வலைபயிற்சி செய்யும்போது கே.எல்.ராகுல் இடது கை மற்றும் மணிக்கட்டில் பலத்தக்காயம் ஏற்பட்டது.