தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ராகுலை சேர்க்காதது ஏன்?' - ஸ்ரீகாந்த் கேள்வி - கே.எல்.ராகுல்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கே.எல். ராகுலை சேர்க்காதது ஏன்? என முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

Aus vs Ind: Don't know why Rahul dropped for Boxing Day Test, says Srikkanth
Aus vs Ind: Don't know why Rahul dropped for Boxing Day Test, says Srikkanth

By

Published : Dec 26, 2020, 9:26 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து, விளையாடிவருகிறது.

இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் சேர்க்கப்படாமல், சுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது ட்விட்டர் பதிவில், "கே.எல். ராகுலை ஏன் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்குத் தேர்வுசெய்யவில்லை?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கும் கே.எல். ராகுல், முன்னதாக அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் விளையாடும் லெவன் அணியிலும் இடம்பெறவில்லை. அதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுலை மீண்டும் சேர்க்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:பாக்ஸிங் டே: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்!

ABOUT THE AUTHOR

...view details