தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 10, 2020, 4:43 PM IST

ETV Bharat / sports

இந்தியா-ஆஸ். முதல் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!

அடிலெய்டு மைதானத்தில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டியில் 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

AUS VS IND
AUS VS IND

கரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளோடு மீண்டும் போட்டிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன.

சமீபத்தில், கிரிக்கெட் உலகின் மிகப் பிரபலமான ஐபிஎல் தொடர் பார்வையாளர்களின்றி நடைபெற்றது. இந்தத் தொடர் இன்றோடு முடிவடையவிருக்கும் நிலையில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அங்கு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளனர். அதன்படி ஒருநாள் தொடர் நவம்பர் 27ஆம் தேதியும் டி20 தொடர் டிசம்பர் 4ஆம் தேதியும் தொடங்கவிருக்கின்றன. டெஸ்ட் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆனால் 50 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. அதன்படி தினமும் 27 ஆயிரம் பார்வையாளர்கள் இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியைக் கண்டுகளிக்க முடியும்.

இது இரு அணிகளுக்கான முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியாகும். இப்போட்டியைத் தொடர்ந்து அடுத்து நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகளிலும் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாட மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் ரோஹித் சர்மா அணிக்குள் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஐந்து வீரர்கள் சிறப்பாக ஆடிவிட்டால், மும்பைக்கு 5ஆவது கோப்பை உறுதி!

ABOUT THE AUTHOR

...view details