கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது மீண்டும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் திட்டமிட்டுள்ளன. சமீபத்தில் இத்தொடருக்கான தற்காலிக அட்டவணை வெளியிடப்பட்டு, பங்கேற்கும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வேல், ஸ்டோய்னிஸ் போன்ற அனுபவ வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் புதுமுக வீரரான கேமரூன் கிரீனிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒருநாள், டி20 ஆஸி., அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட்,ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபூசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ் , மேத்தேயூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.
இதையும் படிங்க: முதலும் கோலி, சதமும் கோலி - மாஸ் காட்டிய பும்ரா!