இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற டிச.17 ஆம் தேதி தொடங்குகிறது. அடிலெய்டில் தொடங்கும் முதலாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் (இரண்டாவது டெஸ்ட்) போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டியை காண 25 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையை 30 ஆயிரமாக அதிகரித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.