தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 19, 2020, 11:28 AM IST

Updated : Dec 19, 2020, 1:51 PM IST

ETV Bharat / sports

பகலிரவு டெஸ்ட்: மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 39 ரன்களுக்கு ஆல் ஆவுட்டானது.

AUS vs IND, 1st Test: Team India on their knees, record lowest score in Test cricket
AUS vs IND, 1st Test: Team India on their knees, record lowest score in Test cricket

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது பகலிரவு ஆட்டமாக கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கியது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது பகலிரவு ஆட்டமாக கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கியது.

ஆஸ்திரேலிய முதல் இன்னிங்ஸ்:

அதன்பின் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது முதல் ஓவரிலேயே ஸ்டீவ் ஸ்மித்தை வழியனுப்பிவைத்தார். அதன்பின் கிரீன், டிராவிஸ் ஹெட் ஆகியோரையும் அடுத்தடுத்து வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணியை நிலைகுலையச் செய்தார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிம் பெய்ன் 73 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மீண்டும் தடுமாற்றத்தில் இந்தியா

இதைத்தொடர்ந்து நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு மீண்டும் பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் இணை தொடக்கம் தந்தது. இந்த இன்னிங்ஸிலும் பிரித்வி ஷா, கம்மின்ஸ் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி ஏமாற்றினார். இதையடுத்து மயாங்க் அகர்வாலுடன், நைட் வாட்மேனாக ஜஸ்பிரித் பும்ரா களமிறங்கினார்.

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 62 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் மயாங்க் அகர்வால் 5 ரன்களுடனும், ஜஸ்பிரித் பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

கம்மின்ஸ், ஹசில்வுட் வேகத்தில் சரிந்த இந்தியா:

இதைத்தொடர்ந்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் பும்ரா 2 ரன்களிலும், மயாங்க் அகர்வால் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் வந்த அனுபவ வீரர்கள் புஜாரா, கேப்டன் கோலி, ரஹானே ஆகியோரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப இந்திய அணி 26 ரன்களுக்குள்ளாகவே 7 விக்கெட்டுகளை இழந்தது.

அவர்களைத் தொடர்ந்து வந்த விஹாரி, சஹா, அஸ்வின் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். இறுதியாக உமேஷ் யாதவுடன் ஜோடி சேர்ந்த ஷமி, ஹசில்வுட் வீசிய பந்தில் காயமடைந்து, ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.

இரட்டை இலக்க ரன்களைக்கூட தொடாத இந்திய வீரர்கள்

இதனால் இந்திய அணி 36 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் ஐந்து விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் விளையாடிய இந்திய அணி வீரர்களில் எவரும் இரட்டை இலக்க ரன்களைக்கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையையும் இந்திய அணி செய்துள்ளது. இதையடுத்து 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடிவருகிறது.

இதையும் படிங்க:'முந்தைய அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டேன்' - ரவிச்சந்திரன் அஸ்வின்

Last Updated : Dec 19, 2020, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details