இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்தியா
ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இப்போட்டிக்கான இந்திய அணி நேற்றே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஆஸ்திரேலியா அணியும் அறிவிக்கப்பட்டது.
லயனுக்கும், ஹசில்வுட்டுக்கும் வாய்ப்பு
ஆஸ்திரேலியா அணியில் அறிமுக வீரரான காமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் பந்துவீச்சாளர்களில் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி: விராட் கோலி (கே), மயாங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலிய அணி: ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெய்ன் (கே), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹசில்வுட்.
இதையும் படிங்க:பிபிஎல்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் ஆட்டம் மழையால் ரத்து!