இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
தொடக்கமே தடுமாற்றம்:
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா - மயாங்க் அகர்வால் இணை களமிறங்கினர். இதில் இளம் வீரர் பிரித்வி ஷா சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஸ்டார்க்கிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயாங்க் அகர்வால், 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
நிதான ஆட்டத்தில் புஜாரா - கோலி:
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - புஜாரா இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையின் வரை இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி 5 ரன்களுடனும், புஜாரா 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க:சயீத் முஷ்டாக் அலி: தமிழ்நாடு அணி அறிவிப்பு!