இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் நேற்று சிட்னியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
அதன்படி இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களுடன் முதல்நாள் ஆட்டத்தை நிறைவுசெய்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரஹானே 108 ரன்களுடனும், முகமது சிராஜ் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி 247 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் ரஹானே 117 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணியின் தொடக்க வீரர்கள் உமேஷ் யாதவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதையடுத்து களமிறங்கிய கேப்டன் டிராவிஸ் ஹெட் 18 ரன்களிலும், மார்கஸ் ஹேரிஸ் 35 ரன்களிலும் ஆடமிழந்து பெவிலியன் திரும்பினர்.