தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐசிசி தரவரிசையில் 13வது இடத்திற்கு முன்னேறிய ரிஷப் பந்த் - டாப்-ல் இடம்பிடித்த ஒரே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்! - 13வது இடத்திற்கு முன்னேறிய ரிஷப் பந்த்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இன்னிங்சில் 89 ரன்கள் எடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற இந்திய வீரர் ரிஷப் பந்த் ஐசிசி தரவரிசை பட்டியலில் 13ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Pant
Pant

By

Published : Jan 20, 2021, 7:26 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்று வரலாறு படைத்ததையடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. சிட்னியில ஆஸி.,க்கு எதிராக 97 ரன்களும், பிரிஸ்பனில் 89 ரன்கள் எடுத்து போட்டியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ரிஷப் பந்த் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 13ஆம் இடம் பிடித்துள்ளார். இப்போது டாப்-ல் உள்ள ஒரே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் குவிண்டன் டி காக் 677 புள்ளிகளுடன் 15ஆவது இடத்தில் இருக்கிறார், ரிஷப் பந்த் இப்போது 691 புள்ளிகளுடன் 13ஆம் இடம்பெற்றுள்ளார். பேட்டிங் தரவரிசையில் புஜாரா 7ஆவது இடமும், ரஹானே 9ஆம் இடமும் பிடித்துள்ளனர். டேவிட் வார்னர் 11ஆம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.

பவுலிங்கில் கமின்ஸ் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். பிராட் 2ஆம் இடம் வகிக்கிறார். இந்தியா தரப்பில் டெஸ்ட் பவுலிங் தரநிலையில் 8ஆம் இடத்தில் அஸ்வினும், 9ஆம் இடத்தில் பும்ராவும் உள்ளனர். பேட்டிங்கில் கேன் வில்லியம்சன் 961 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். லபுஷேன் 878 புள்ளிகள் பெற்று விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி 3ஆம் இடத்துக்கு முன்னேறினார். விராட் கோலி 862 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் இருக்கிறார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்

நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 91 ரன்கள் எடுத்த இளம் வீரர் சுப்மன் கில் 68ஆவது இடத்தில் இருந்து 47ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் 82ஆவது இடத்திலும், பந்துவீச்சில் 97ஆவது இடத்திலும் உள்ளார்.

இதையும் படிங்க:'வரலாற்று நிகழ்வை கொண்டாடுங்கள்' - டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து கோலி பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details